BADAM PAK

BADAM PAK

பாதம் பாக்

மரு. அருண் சின்னையா, PhD.

இந்த தயாரிப்பு எங்களின், தலை சிறந்தது என்பதில் பெருமை கொள்கிறோம். இதில் கலந்துள்ள மருந்து சரக்குகள் அனைத்தும், சகலவிதமான நோய்களுக்கும் பயன்படுகிறது தனிதனியாக. இவைகளை, ஒன்றிணைத்து, அனைத்து வயதினருக்கும் மற்றும் சகல நோய்களுக்கும் துணை மருந்தாகவும், தினசரி காலை மாலை உடலுக்கும், மனதுக்கும் உற்சாகமூட்டும் பானமாக அருந்தும் வகையினில், தயாரித்திருக்கிறோம். நம் அன்பு குழந்தைகள் அப்படியே எடுத்து சாப்பிடும் வகையினில் தயாரித்துள்ளோம்.

இதில் கலந்துள்ள மூலிகைகள்:

 1. பாதாம்
 2. காட்டு ஜாதிக்காய்
 3. ஜாதிக்காய்
 4. இஞ்சி
 5. மிளகு
 6. திப்பிலி
 7. கிராம்பு
 8. இலவங்கப்பட்டை
 9. தாளிசபத்திரி
 10. சிற்றேலம்
 11. நிலப்பூசணி
 12. பூனைக்காலி விதை
 13. சாலாம் மிசிறி
 14. தண்ணீர் விட்டான் கிழங்கு
 15. தாமரை
 16. மூங்கிலரிசி
 17. குங்குமப்பூ
 18. இரச செந்தூரம்
 19. வங்க பற்பம்
 20. பவளம்
 21. நெய்
 22. சர்க்கரை

பாதாம்

         இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல் நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டவை. இந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதாம் பருப்பில் எண்ணிலடங்கா பல சத்துகள் உள்ளன.

தாவரவியல் பெயர்:

         Prunus dulcis

பயன்கள்:

        இரத்த ஓட்டம் சீராகும். ஆண்மை குறைவு தீரும். இதய நோய்கள் வருவதை தடுக்கும்.   மலச் சிக்கல் குணமாகும். தோல் நோய் குணமாகும். உடல் சக்தி உண்டாகும்.

       தலை முடி பிரச்சினையும் தீரும்

       கருவிற்கு ஊட்டமளிக்கும்

       உடல் எடை குறையும்

இரத்த ஓட்டம் சீராக!

         ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு அதிகம் உண்டு. ரத்த ஓட்டத்தை சீராக்க பாதாம் உதவுகிறது.

ஆண்மை குறைவு தீர!

        பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும். உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகள் தீரும்.

இதய நோய்கள் வருவதைத் தடுக்க!

       பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துகள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

மலச்சிக்கல் குணமாக!

       பாதாம் பருப்புகளில் உணவை செரிப்பிக்கும் வேதிப் பொருள் அதிகம் உள்ளன. பாதாம் பருப்பினால் மலச்சிக்கல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகள் குணமாகும்.

தோல் நோய்கள் குணமாக!

      பாதாம் பருப்புகளில் தோலுக்கு நெகிழ்வு தன்மை, புத்துணர்வு பெற செய்யும் இரசாயனங்கள் அதிகம் உள்ளன.

      இது தோலுக்கு அதிக பளபளப்பை தரும் மற்றும் தோல் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

உடல் சக்தி உண்டாக!

       பாதாம் பருப்பில் அதிக அளவு உள்ள புரதச்சத்தும் வைட்டமின் சத்துகளும் எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெறச் செய்து உடலுக்கு சக்தி உண்டாகச் செய்கிறது.

தலைமுடி வளர!

       பாதாம் பருப்பில் உள்ள மெலனின் மற்றும் கேரட்டின் தலை முடி நன்கு வளர உதவுகிறது.

கருவிற்கு ஊட்டமளிக்க!

       பாதாம் பருப்புளை சரியான விகிதத்தில் உட்கொள்ள கருவிற்கு தேவையான ஊட்டமளிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட!

        பாதாம் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உதவுகிறது.

உடல் எடை குறைய!

        பாதாம் பருப்பில் கெட்ட கொழுப்பு அதிகம் இல்லாததால் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

ஜாதிக்காய்:

தாவரவியல் பெயர்:

       Myristica fragrans

பயன்கள்:

       விந்துநட்டம், அதிசாரம், வாயுவினாலுண்டாகும் நோய், தலைவலி, இரைப்பு, இருமல், கிராணி, வெப்பத்தை முன்னிட்டு வரும் பிணிகள் முதலியன தீரும். வயிற்றுவலி, வயிற்று பொருமல், அக்கினி மந்தம் இவைகள் குணமாகும்.

தூக்கமின்மை குணமாக!

        ஜாதிக்காயை நன்கு தூளாக்கி தினமும் இரவு தூங்கும் முன் சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர தூக்கமின்மை, நரம்பு குறைபாடு குணமாகும்.

இரத்தத்தை சுத்திகரிக்கும் ஜாதிக்காய்!

       ஜாதிக்காயை அவ்வப்போது பாலில் கலந்து உட்கொள்ள ரத்தத்தில் உள்ள விஷ கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஜாதிக்காய்!

        வாயு கோளாறுகள், அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பு கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாதிக்காய் தூளை பால் அல்லது பால் கலக்காத தேநீருடன் அருந்தி வர நீங்கும். குடல் பூச்சிகள் வெளிப்படும்.

ஆண்மை பலப்பட!

         தினமும் இரவு உறங்கும் முன் பாதாம் பருப்பை அரைத்து பசும்பாலில் கலந்து அதனுடன் சிறிது ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அருந்தி வர நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை குணமாகும்.

காட்டு ஜாதிக்காய்:

        பெரும்பாலும் இலங்கையில் காட்டு ஜாதிக்காய் அதிகமாக காணப்படுகிறது. இக்காட்டு ஜாதிக்காயின் கனி அமைப்பு பார்ப்பதற்கு மனித மூளையின் அமைப்பினை ஒத்து காணப்படுகிறது. நரம்பு மண்டலத்திற்கு சிறந்த ஒரு மருந்தாக கருதப்படுகிறது. ஜாதிக்காயின் விதை மற்றும் பத்திரி மசாலாவில் சேர்க்கப்படுகிறது.

       காட்டு ஜாதிக்காய் வயிற்றுப்போக்கு மற்றும் கழிச்சலுக்காக செய்யும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. இருமல், மூட்டுகளின் வீக்கம். தோல் நோய்கள். புண்கள். தூக்கமின்மை.     செரிமான குறைவுத்தன்மை. கல்லீரலில் உள்ள நோய்கள். புழுக்கள் ஆகியவற்றை நீக்க காட்டு ஜாதிக்காய் பொடி உள்ளுக்கும் மற்றும் வலி நிவாரணி எண்ணெயாகவும் பயன்படுகிறது.

காட்டு ஜாதிக்காயின் பட்டை மற்றும் இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்கும் போது தொண்டையில் உள்ள நோய்கள் அகலும். புண்களில் உண்டாகும் வீக்கத்தை நீக்க காட்டு ஜாதிக்காயை நீரிலிட்டு பற்றிட நீங்கும். காட்டு ஜாதிக்காயினை நீரில் ஊறவைத்து குடிக்க அதிதாகம் நீங்கும். குடல் எரிச்சல் நோய்க்கு ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை நீரில் தர நீங்கும்.

       காட்டு ஜாதிக்காயில் உள்ள வேதியல் பொருள்களான Beta pipene, Myristic acid, Lignans உடலுக்கு பல வித நன்மைகளை தருகின்றன.

        Lignans என்பது இதய நோயை உண்டாக்காமல் இருப்பதற்குரிய உயரிய வேதியியல் பொருள்களாகவும் மற்றும் பெண்களுக்கு மாதவிடாயின் முடிவுக்கு பிறகு ஏற்படும் ஆஸ்டியோ போரோஸிஸ் மற்றும் மார்பக புற்று நோய் வராமல் இருக்க காட்டு ஜாதிக்காயில் உள்ள வேதியியல் பொருள் உதவுகிறது.

          காட்டு ஜாதிக்காயில் உள்ள Beta pipene எனும் வேதியியல் பொருளில் Anti-viral மற்றும் Anti-microbial என்னும் செய்கைகள் நிரம்பியிருக்கின்றன.

இஞ்சி:

           இஞ்சி ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவத்தில் ஒரு குணமளிக்கும் காரணியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

           குமட்டல், வாந்தி, வாயு மற்றும் வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குறைக்க பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளில் ஒன்றாக இருக்கிறது.

தாவரவியல் பெயர்:

          Zingiber officinale

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குணமாக!

          இஞ்சியில் உள்ள மெபனமிக் அமிலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கிறது.

வலி நிவாரணி!

          அடிபடுதல் அல்லது உடல் உழைப்பு காரணமாக ஏற்படும் உடல் வலியினை போக்க இஞ்சி பயன்படுகிறது.

         இஞ்சியைத் தேநீருடனோ அல்லது இஞ்சி சாறாகவோ பயன்படுத்தலாம்.

முடக்கு வாதம் குணமாக!

         இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதம் சிறிது சிறிதாக குறைவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

சளி குணமாக!

         சிறிதளவு இஞ்சியை வேகவைத்து நீரை நாம் பருகும் தேநீரில் கலந்து பருகி வந்தால் சளியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கிருமிநாசினியாக செயல்படும் இஞ்சி!

         இஞ்சி இயற்கையிலேயே நன்மையான அமிலங்கள் நிறைந்த ஒரு உணவு பொருளாகும்.

         இஞ்சியை அடிக்கடி உணவுகளில் சேர்க்க ரத்தம், செரிமான உறுப்புகள் ஆகியவற்றில் தங்கியிருக்கும் நுண்ணுயிர்களை அழித்து உடலை நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

நீரிழிவு நோய் கட்டுப்பட!

         நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சரியான அளவில் வைத்திருக்கும் பணியை இஞ்சி செய்கிறது.

         சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இஞ்சி மற்றும் இஞ்சி சார்ந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதோடு பிற நோய் வராமல் தடுக்கலாம்.

ஜீரணத்தன்மை மேம்பட!

         தினந்தோறும் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட இஞ்சியை சிறிதளவு சாப்பிட்டு வர வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கி ஜீரண சக்தி மேம்படும்.

கல்லீரல் பலம் பெற!

         நிறைந்த உணவுகளை செரிக்க தேவையான என்சைம்கள் அதிகம் உற்பத்தி செய்வதாலும், வீரியமிக்க மருந்துகள் அதிகம் அருந்துவதாலும், மது பானம் போன்றவற்றாலும் கல்லீரலின் செயல்பாடு தொய்வடைகிறது.

         கல்லீரல் பலம் பெற தினமும் இஞ்சியை உணவில் சேர்த்து வர இழந்த சக்தியை மீண்டும் பெறலாம்.

மிளகு:

         மிளகு கொடி வகையை சார்ந்தது. இதில் வைட்டமின் ஏ, சி, கரோடின்கள் மற்றும் பிற சத்துகள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

தாவரவியல் பெயர்:

         Piper nigrum

தொற்று நோய்களைத் தடுக்கும் மிளகு!

         மிளகில் உள்ள காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், சுரம் போன்ற நோய்களை தடுக்கும்.

போதை பழக்கத்திலிருந்து விடுபட!

        போதை பழக்கத்திலிருந்து விடுபட சில மிளகுகளை வாயில் போட்டு மென்று வர அப்பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

மலட்டுத்தன்மை குணமாக!

        இன்று நாம் உண்ணும் உணவுகள் விஷத்தன்மை நிறைந்ததாக உள்ளது. இவற்றை உண்பதால் சில ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

         மிளகை தினமும் உண்பதால் மலட்டுத்தன்மை குணமாகும்.

வாயு கோளாறுகள் குணமாக!

        மிளகை தினமும் உணவில் சேர்ப்பதனால் வாயு கோளாறுகள் நீங்கும்.

புற்றுநோய் தடுக்க!

          நார்ச்சத்தில்லாத உணவுகளையும், மாமிச உணவுகளையும் அதிகளவில் உண்பதால் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

         உண்ணும் உணவில் மிளகு சேர்த்து உண்ண புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சளி மற்றும் இருமல் குணமாக!

         மிளகினை பாலில் கலந்து அருந்த சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பற்கள் பலம் பெற!

         வாயில் ஈறுகளின் வீக்கம், பல் சொத்தை, கிருமிகள் உற்பத்தி போன்றவற்றை தடுக்க மிளகு சிறந்த மருந்தாக உள்ளது.

தோல் நலனை மேம்படுத்த!

         வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கங்கள், தோல் நிற மாற்றம் என இவ்விரு பிரச்சினைகளையும் தடுக்க மிளகு உதவுகிறது.

இரத்த அழுத்தம் சீராக இருக்க!

          இரத்த அழுத்தம் சீராக இருக்க தினமும் சில மிளகுகளை மென்று சாப்பிடலாம்.

திப்பிலி:

         மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்தது இந்த காச நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மையுடைய திப்பிலி.

தாவரவியல் பெயர்:

         Piper longum

மூலம் குணமாக!

         ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவுத்திரம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

         திப்பிலியைப் பொடி செய்து அதனுடன் நிழலில் உலர்த்தி பொடி செய்த குப்பைமேனி இலையையும் கலந்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

கல்லீரல் மண்ணீரல் பலம் பெற!

          நம் உணவில் உள்ள நச்சுகளை நீக்குவதோடு அல்லாமல் தேவையான பித்த நீரை உற்பத்தி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி கல்லீரல் மண்ணீரல் இரண்டையும் பலம் பெறச் செய்கிறது திப்பிலி.

சுவாச நோய்கள் குணமாக!

         திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து அருந்தி வர மார்பு நுரையீரலை பாதிக்கும் சுவாச சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.

காய்ச்சல் குணமாக!

          உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறையும் சமயத்தில் காய்ச்சல் ஏற்படுகிறது.

          சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை கஷாயம் செய்து அருந்தி வர காய்ச்சல் குணமாகும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு கட்டுப்பட!

        திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு சேர்த்து பொடி செய்து அரிசி கழுவிய நீரில் கலந்து மூன்று தினங்களுக்கு தினமும் இருவேளை குடித்து வர மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப் போக்கு கட்டுப்படும்.

செரிமானமின்மை குணமாக!

        மலச்சிக்கல் தீர்ப்பதிலும், குடலை சுத்திகரிப்பதிலும் திப்பிலி சிறந்தது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் திப்பிலி குணமாக்குகிறது.

இரத்தசோகை குணமாக!

         திப்பிலி பொடியை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

சர்க்கரை நோய் குணமாக!

        திப்பிலி பொடி கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவு நிவாரணம் அளிக்கிறது.

கிராம்பு:

தாவரவியல் பெயர்:

         Eugenia caryophyllata

கிராம்பில் உள்ள ஊட்டச்சத்துகள்:

         கிராம்பில் யூஜெனோல் என்ற பொருள் 70 – 90% உள்ளது.

        அசிடைல் யூஜெனோல்

        வெண்ணிலின்

        டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பிற எண்ணெய் பொருட்கள் உள்ளன.

        100 கிராம் கிராம்பில் 274 கலோரிகள்

        13 கிராம் கொழுப்பு

        277 மிகி சோடியம்

       1020 மிகி பொட்டாசியம்

        66 கிராம் கார்பொஹைட்ரேட்

        6 கிராம் புரதம் வைட்டமின்கள்

        தாதுக்கள் 3%

        வைட்டமின் ஏ 0.63%

        கால்சியம் 65%

        இரும்பு 20%

        வைட்டமின் பி 6 – 64%

        மெக்னீசியம் உள்ளன.

காலரா குணமாக!

        கிராம்பு காலரா நோய்கிருமிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு உடலில் இருக்கும் காலரா கிருமிகளை அழிக்கிறது.

வாய், பல் ஈறு பிரச்சினைகள் குணமாக!

        வாய் சம்பந்தமான பிரச்சினைகள், பல் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

        குளிர் காலங்களில் ஈறுகளின் வீக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒன்றிரண்டு கிராம்பை மென்று வாயில் சற்று நேரம் அடக்கி வைப்பதால் ஈறு வலி குணமாகும்.

தலைவலி குணமாக!

         சிறிதளவு கிராம்பை பொடி செய்து நீர்விட்டு குழைத்து, ராக் சால்ட் சேர்த்து நன்கு கலந்து சூடான பசும்பாலில் போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க!

        கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை நிறைந்த மூலிகை பொருளாக உள்ளது.

        இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை மேம்படச் செய்கிறது.

வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக!

        கிராம்பு வயிற்றில் இருக்கும் கிருமி தொற்றுகளை நீக்க வல்லது. மேலும் அஜீரணம், நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லைகள், அடிக்கடி வாந்தி ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் குணமாக்க வல்லது.

புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க!

         கிராம்பில் இருக்கும் பினைல்புரப்போனைடு என்கிற வேதிப்பொருள் உடலின் புற்று நோய் பாதித்த செல்களை மேலும் வளர்ச்சி பெறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

ஆஸ்துமா குணமாக!

         கிராம்பு எண்ணெய், தேன், வெள்ளைப்பூண்டு சாறு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயால் ஏற்படும் சுவாசக் கோளாறு நீங்கும்.

சிறுநீரக பிரச்சினைகள் சீராக!

        சிறிது கிராம்பு மற்றும் மிளகை எடுத்து நன்கு அரைத்து அதை திராட்சை சாறுடன் கலந்து பருகி வந்தால் சிறுநீரக பிரச்சினைகள் சீராகும்.

மூட்டு வலி குணமாக!

          கிராம்புடன் சுக்கை சேர்த்து கஷாயம் செய்து குடிக்க மூட்டு வலி குணமாகும்.

இலவங்கப்பட்டை:

         மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள்களைத் தான்  நம் முன்னோர்கள் சமையலில் பயன்படுத்தி வந்தார்கள். இலவங்க மரத்தின் தண்டுகளை வெட்டுவதன் மூலம் உள்பட்டை பிரிக்கப்பட்டு அவை காய்ந்ததும் இலவங்கப்பட்டை சுருள்களாக குச்சிகளாக உடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

         மருத்துவ ரீதியாக இவை வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

பயன்கள்:

குடல் நோய் எரிச்சல்:

         குடல் நோய் மற்றும் அதன் மூலம் வரும் எரிச்சல்களை பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியாக்கள் குணமாக்க உதவுகிறது.

மூட்டு வலி:

         இலவங்கப்பட்டை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது மற்றும் பட்டையின் தூளை தேநீரில் கலந்து எடுத்துக் கொள்வது மூட்டு வலிக்கு நன்மை பயக்கும்.

சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்க:

         இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இலவங்கப் பட்டை வெகுவாக உதவுகிறது. குறிப்பாக டைப் 2 சர்க்கரை உள்ளவர்களுக்கு சிறந்த பலன் அளிக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது:

         இலவங்கப்பட்டை புற்று நோய் செல்கள் வளர்ச்சி அடைவதைத் தடுக்கிறது.

பற்களின் பாதுகாப்பு மேம்பட:

       வாயில் இருக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படும் பற்சொத்தை, பல் சிதைவு போன்றவற்றிலிருந்து விடுபட இலவங்கப்பட்டை பல் பசை, பல் பொடி உதவுகிறது.

மூளையின் செயல்பாடு அதிகரிக்க:

       ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த இலங்கப்பட்டை அல்சைமர் நோய், பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் சார்ந்த நோய்கள் உருவாவதைத் தடுக்கிறது.

இரத்தப்போக்கு கட்டுப்பட:

        எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் கருப்பை நார்த்தசுக்கட்டிகள் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஜீரணசக்தியை அதிகரிக்கிறது:

        இலவங்கப்பட்டையில் உள்ள எண்ணெய் சக்திவாய்ந்த ஆண்டிஆக்ஸிடெண்ட் பண்புகளை கொண்டுள்ளது. செரிமானப்பாதையில் தொற்று ஏற்படும் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது. தினமும் தேநீரில் ஒரு சொட்டு இலவங்கப்பட்டை எண்ணெய் சேர்த்து பருகுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

தாளிசபத்திரி:

        தாளிசபத்திரி என்பது பல நற்குணங்கள் பொருந்திய மூலிகை.

பயன்கள்:

         தாளிசபத்திரி இலை மற்றும் பட்டை மசாலா பொருந்திய உணவுகள் மற்றும் பிரியாணி போன்றவற்றில் நறுமணத்திற்காக சேர்க்கப்படுகிறது. தாளிசபத்திரியின் பட்டை பொடி பல் துலக்கவும் பல் சொத்தை நீக்கவும் பயன்படுகிறது.

         வாயில் உள்ள துர்நாற்றத்தை போக்கி நறுமணத்தை உண்டாக்குவதில் தாளிசபத்திரி சிறந்தது.

         தாளிசபத்திரி பட்டை பொடி தேனில் கலந்து 3 – 5 கிராம் தினமும் கொடுத்து வர இருமல் மற்றும் இரைப்பு எனும் ஆஸ்துமா நோயைப் போக்கும்.

        தாளிசபத்திரியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மாதவிடாயில் வரும் தீவிர வயிற்று வலி மற்றும் கருப்பை வீக்கத்தை சரி செய்யும். அளவு 3 – 5 துளிகள்.

       தாளிசபத்திரியின் பட்டை பொடியை நீரில் இழைத்து வலி மற்றும் வீக்கத்திற்கு பற்றிடலாம்.

       இளைப்பு நோயினால் உண்டாகக் கூடிய பக்க விளைவுகளை குறைக்க தாளிசபத்திரியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் 3 – 6 துளிகள் அளவு கொடுக்க நற்பலன் தரும்.

        தாளிசபத்திரியின் பட்டையை நீரிலிட்டு ஊறவைத்து அந்நீரினை பருகினால் இதய தசைகளுக்கு பலமும் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

       மூக்கிலிருந்து நீர் வடிதல் வரும் போது தாளிசபத்திரி பட்டைபொடி மற்றும் மிளகு தூளை முகர நற்பலன் கிடைக்கும்.

         தாளிசபத்திரி இலை கல்லீரல் மற்றும் மண்ணீரலுக்கு நன்மை பயக்கும்.

        தாளிசபத்திரி பட்டையை நீரிலிட்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மாறும்.

       சுகப்பிரசவம் உண்டாக தாளிசபத்திரி பயன்படுகிறது என்பது சித்தர்கள் கருத்து.

சிற்றேலம்:

         ஏலக்காயில் பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளன. வயிறு வலி, ஆண்மை பெருக்கி, தலைச்சுற்று, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், கல்லீரல் பிரச்சினைகள், தலைவலி, வயிறு பிரச்சினைகள் தீரும்.

பயன்கள்:

வலி நிவாரணி:

        உடல் உறுப்புகளின் தொய்வு அல்லது பாதிப்பு ஏற்படும் போது தாங்க முடியாத வலி ஏற்படுகிறது.   ஏலக்காயில் உள்ள வேதிப்பொருள் மூளைக்கு சென்று வலி ஏற்படும் நிலையை குறைக்க உதவுகிறது.

நீரிழிவு கட்டுப்பட:

       நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சார்ந்த உணவுகளை உட்கொள்ளும் போதோ, தேநீரிலோ ஏலக்காய்களை தூளாக்கி கலந்து எடுத்துக் கொள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

பற்கள் மற்றும் ஈறுகள் பலப்பட:

       தினமும் உணவு சாப்பிட்ட பின்னர் ஒன்றிரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய், ஈறுகள் மற்றும் பற்கள் சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் குணமாகும்.

வயிறு சார்ந்த நோய்கள் குணமாக:

       வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமநிலையின்மை, வாயுத்தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற அனைத்து பிரச்சினைகளிலிருந்து விடுபட ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து பொடித்து தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் குணமாகும்.

மன நலம் மேம்பட:

       மன அழுத்தம் உள்ள நேரங்களில் ஏலக்காய் கலந்த தேநீர் எடுத்துக் கொள்ள மூளை செல்களை அமைதிப்படுத்தி மனம் மற்றும் உடலில் ஏற்பட்டிருக்கும் இறுக்க நிலையை தளர்த்தி மனநிலை மேம்பட உதவும்.

புகை பழக்கத்திலிலருந்து விடுபட:

       புகை பழக்கத்தை நிறுத்திய நபர்களுக்கு மேலும் மேலும் புகை பிடிக்க தூண்டும் போது சிறிதளவு ஏலக்காய்களை முழுதாகவோ அல்லது பொடித்தோ வாயில் போட்டு மென்று வர புகை பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

நிலப்பூசணி:

          நிலப்பூசணி இதனால் தளர்ந்த உடல் இறுகும், இளைத்த உடற்கட்டுகள் செழுமையாகும்.

         மேனி ஒளிரும்

         எருக்கட்டு போம்

         நுட்பமான அறிவு உண்டாகும்.

பயன்கள்:

        இது பெரும்பாலும் ஆண்மை, வன்மை, அழகு முதலியவற்றை பெருக்குவதற்காகச் செய்யும் இலேகியங்களில் சேர்க்கப்படுகிறது.

ஆண்மை பெருகும்:

        பச்சை கிழங்கு சாறு பிழிந்து அத்துடன் பசுவின் பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வர ஊட்டம் தரும். இதனால் ஆண்மை பெருகும்.

பால் சுரக்கும்:

        இதன் சாற்றுடன் மல்லி, வெந்தயம், சீரகம், சர்க்கரை சேர்த்து சாப்பிட பால் பெருகும்.

கிழங்கை உலர்த்தி பொடித்து திராட்சை சாற்றில் கொடுக்க பாலைப் பெருக்கும்.

உடல் பருக்கும்:

       இதன் பொடியுடன் நெய் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு நெய் சேர்த்து கொடுக்க உடல் பருக்கும்.

பெரும்பாடு குணமாக:

        கிழங்கின் பொடியுடன் சர்க்கரை, வெண்ணெய் கலந்து காய்ச்சி இலேகிய பதமாகச் செய்து கொடுக்க பெரும்பாடு குணமாகும்.

குழந்தையின்மை போக்கும்:

        இது விந்தணுக்களை மேம்படுத்தி குழந்தையின்மையைப் போக்குகிறது.

குளிர்ச்சியுண்டாக்கி:

         இது குளிர்ச்சியுண்டாக்கி, இது உடலில் எரியும் உணர்வு, அதிக வெப்பம் மற்றும் இரத்தப் போக்கு கோளாறுகளுக்கு உதவுகிறது.

மாதவிடாய் கோளாறுகள் குணமாக:

         மாதவிடாய் கோளாறுகள், மாதவிடாய் நோய்க்குறி மற்றும் கருப்பை பலவீனம் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கிறது.

        மேலும் தாய்ப்பால் சுரப்பினை ஊக்குவிக்கிறது.

பூனைக்காலி விதை:

          இது வெப்ப நாடுகளில் பயிராகும் ஒரு வகைக் கொடி, இதில் கருமை, வெம்மை என இரு வகை உண்டு.

செய்கைகள்:

விதை:

      துவர்ப்பி, நரம்புரமாக்கி, காம பெருக்கி.

வேர்:

      சிறுநீர் பெருக்கி, நரம்புரமாக்கி.

சுணை:

      புழுக்கொல்லி, தடிப்புண்டாக்கி

பயன்கள்:

      பூனைக்காலி விதைப் பொடியில் ஹர்மின் ஆல்கலாய்டுகள், நிகோடின், லெசிதின், நிறைவுறா அமிலங்கள், கல்லிக் அமிலம், புஃபோடெனின் மற்றும் ஜெனிஸ்டீன் போன்ற பல்வேறு சேர்மங்கள் உள்ளன. இந்தக் கலவைகள் பார்கின்சன் நோய்க்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் நரம்பியக்கச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.

       அனைத்து வகையான செரிமானக் கோளாறுகளுக்கும் நன்மை பயக்கும்.

       அறிவாற்றல், தூக்கக் கோளாறுகள், தன்னிச்சையான இயக்கம், மனநிலை, கற்றல் மற்றும் பணி நினைவகம் ஆகியவற்றில் டோபோமைன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் லெவோடோபா (டோபமைன் முன்னோடி) நிறைந்த பூனைக்காலி விதை மத்திய நரம்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கிறது.

      இனப்பெருக்க உறுப்பின் செயல்பாட்டினை மேம்படுத்துகின்றன. விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

      காயின் மீது மூடியிருக்கும் சுணையை பனைவெல்லத்திலாவது, தேனிலாவது கலந்து கொடுக்க வயிற்றுப்புழு வெளிப்படும்.

      விதையை நன்றாக உலர்த்திப் பொடித்து அதைப் பாலில் கொடுத்து வர வெள்ளை, வெட்டை நீங்கும். ஆண்மை உண்டாகும்.

      இதன் வேரை குடிநீரிட்டுத் தேன் கலந்து கொடுத்து வர ஊழி நோய் சுர நோயிற் காணும் முப்பிணி நீங்கும்.

      இதன் வேரை அரைத்து வீக்கங்களின் மீது பற்றிடலாம்.

சாலாம் மிசிறி:

        ஆண்களுக்கு ஏற்படும் இச்சை சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறப்பான தீர்வை வழங்குகிறது.

        ஆண்மை குறைவு, ஆண்மை தளர்ச்சி, போதிய எழுச்சியின்மை, மனச்சோர்வினால் உறவில் நாட்டமின்மை, விரைவில் விந்து வெளிப்படுதல், குறைவான விந்து அணுக்களின் எண்ணிக்கை போன்ற அனைத்து குறைபாடுகளுக்கும் ஓர் அற்புத மருந்தாக சாலாமிசிறி பயன்படுத்தப் படுகிறது.

சாலாமிசிறி பொடி:

        சாலாமிசிறியின் பொடி மிக எளிதாக செரிமானப்பட்டு முழு சக்தியினை உடலுக்கு தருகிறது. சோர்வு நீக்கி புத்துணர்வையும் மலர்ச்சியும் தருவதுடன் ஆண்மை சம்பந்தமான சகல வியாதிகளையும், இயலாமையையும் குணப்படுத்தும்.

பயன்கள்:

ஆண் பிறப்பின் முழுமை:

       விரைவில் விந்து வெளிப்படுதலை தடுத்து உறவினை மேலும் நீடிக்க பெரிதும் உதவுகிறது.விந்தணுக்களின் எண்ணிக்கையை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் அணுக்களை வீரியமடைய செய்கிறது. ஓர் ஆண் பிறப்பினை முழுமை அடையச் செய்கிறது.

ஆண்மை குறைவு:

       ஆண்குறியை பெரிதாக்குகிறது, மனச்சோர்வோ, பயமோ, உடல் சோர்வோ, உடல் தளர்ச்சியோ, விருப்பமின்மை எத்தனை இருந்தாலும் ஆர்வமூட்டி உடல் உறவிற்கு முழுமையான சக்தியை அளித்து ஆணின் துணையை முழு திருப்த்தியடைய வைக்கிறது.

        புகை, மது பழக்கமுள்ளவர்களுக்கு ஆண்மை தளர்வினை நீக்கும் தன்மையுடையதாக கூறப்படுகிறது.

விந்து வெளிப்படுதல்:

       ஆண்குறிக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரித்து நீண்ட நேர விரைப்பினையும், முழுமையான எழுச்சியினையும் தருகிறது. தூக்கத்தில் விந்து வெளிப்படுதலை நிறுத்துகிறது. மேலும் காச நோய், நீரிழிவு நோய், வயிற்றுப்போக்கு, சீத பேதி போன்ற நோயையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

தண்ணீர் விட்டான் கிழங்கு

         தண்ணீர் விட்டான் கிழங்கு ஒரு சர்வரோக நிவாரணி. பல்வேறு நோய்களை நீக்கும் சக்தி உடையதாக இருப்பதனால் இதற்கு சதாவரி என்ற பெயரும் உண்டு. இது ஆண் பெண் இருவருக்கும் உரிய ஒரு அற்புத மூலிகை.

பயன்கள்:

        உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை இரண்டு கிராம் எடுத்து பசு நெய்யில் கலந்து தினமும் காலை, மாலை உண்டு வர உடல் வலிமை பெறும்.

       விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை பாலுடன் கலந்து உண்ண பலன் பெறலாம்.

       மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதீத இரத்தப் போக்கை கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து தினமும் மூன்று வேளை என 5 நாட்கள் என உண்ண பூரண பலன் கிடைக்கும்.

        தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை 5 கிராம் அளவு எடுத்து சர்க்கரை, பால் சேர்த்து தினமும் மூன்று வேளை உண்டு வர நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், எலும்பு உருக்கி நோய், கை கால் எரிச்சல், தாது பலகீனம் குணமாகும்.

        தண்ணீர் விட்டான் கிழங்கின் சாறு உள்ளுறுப்புகளில் உண்டாகும் புண்களை ஆற்றும்.

       தண்ணீர் விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை 50 கிராம் எடுத்து பொடியாக்கி தினமும் இருவேளை தேனில் கலந்து கொடுக்க அனைத்து விதமான காய்ச்சல் குணமாகும்.

        தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை பால் கலந்து உண்டு வர உடல் உஷ்ணம் மற்றும் வெட்டை சூடு குணமாகும், வெள்ளை படுதல் சரியாகும்.

        தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை பாலில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.

       தண்ணீர் விட்டான் கிழங்கு சாறுடன் தேன் கலந்து கொடுக்க செரிமான பாதையில் உண்டாகும் பிரச்சினைகள் சரியாகும்.

      தண்ணீர் விட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா கிழங்கு, சாலா மிசிறி இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடி செய்து 3 கிராம் அளவு தினமும் இருவேளை பாலில் கலந்து கொடுக்க ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி குணமாகும், விந்து கெட்டியாகும்.

       தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை பாலில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.

       தண்ணீர் விட்டான் கிழங்கு சாறுடன் தேன் கலந்து கொடுக்க செரிமான பாதையில் உண்டாகும் பிரச்சினைகள் சரியாகும்.

       தண்ணீர் விட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா கிழங்கு, சாலா மிசிறி இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடி செய்து 3 கிராம் அளவு தினமும் இருவேளை பாலில் கலந்து கொடுக்க ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி குணமாகும், விந்து கெட்டியாகும்.

தாமரை

        ஆண்மையை அதிகரித்து இளமையைத் தக்க வைக்கும் தாமரை விதைகள்.

இதன் ஊட்டச் சத்துக்கள்:

 1. கார்போஹைட்ரேட்டுகள்
 2. புரதங்கள்
 3. கொழுப்பு
 4. கால்சியம்
 5. இரும்பு
 6. பொட்டாசியம்
 7. சோடியம்
 8. மெக்னீசியம்
 9. பாஸ்பரஸ்

ஆரோக்கிய நன்மைகள்:

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கும்:

        தாமரை விதை நல்ல கொழுப்பைக் கொண்டிருக்கின்றன. தவிர குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டுள்ளன. இந்த சிறப்பான பண்பு உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது:

       தாமரையில் உள்ள குறைந்த சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உதவுகிறது.

நீரிழிவினை குணமாக்கும்:

       தாமரை விதையில் உள்ள ஏராளமான நார்ச்சத்து மற்றும் கொழுப்புகளின் குறைந்த உள்ளடக்கம் மற்றும் அதிக மெக்னீசியம் குறைந்த சோடியம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயனளிக்கிறது.

இதய ஆரோக்கியம் மேம்படும்:

       தாமரையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கருத்தரித்தலை சுலபமாக்க உதவும் தாமரை விதைகள்:

       ஆண்களின் சிக்கலான முன்கூட்டியே விந்து வெளியேறுதல், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தாமரை விதைகள் உதவுகின்றன. இனப்பெருக்க கோளாறுகள் உடையவர்களுக்கும், மலட்டுத்தன்மை உடையவர்களுக்கும் தாமரை விதைகள் சிறந்த பயனளிக்கிறது.

சிறுநீரகத்தை காக்கும் தாமரை விதை:

       அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இயலாமை போன்றவற்றிலிருந்து தடுத்து சிறுநீரகம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

மூங்கிலரிசி

        மூங்கிலரிசியை வெண்பொங்கலாகவும், சர்க்கரை கூட்டி பாயாசமாகவும் செய்துண்ண, அவை உடலுக்கு ஊட்டம் கொடுத்து நோய்களை அணுக வொட்டாமல் செய்யும்.

மூங்கிலரிசியில் உள்ள சத்துகள்:

       மூங்கிலரிசியில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது.

      மேலும் கார்போஹைரேட், புரதம், கால்சியம், மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின், ரிபோப்ளேவின் போன்ற உடலுக்கு தேவையான கனிம சத்துகள் நிறைந்துள்ளன.

பயன்கள்:

மாத விடாய் கோளாறுகளை சரி செய்யும்:

      மூங்கிலரிசியில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் சீராகிறது.

உடல் பலம் பெற:

      மூங்கிலரிசியை சமைத்து உண்டு வர உடல் இறுகி உடல் வலு பெறும். இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

குழந்தைப்பேறு உண்டாக:

      மூங்கிலரிசி விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை மேம்படச் செய்கிறது.

      இது ஆண் பெண் இருவரின் மலட்டுத்தன்மையை நீக்குகிறது.

எலும்புகள் வலுவடைய:

      இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி போன்ற வலிகள் அனைத்தும் குணமாகி எலும்புகளை வலு பெறச் செய்யும்.

நீரிழிவு குணமாக:

      மூங்கிலரிசி சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஆதலால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக பயன்படுகிறது.

மலச்சிக்கல் குணமாக:

       மூங்கிலரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆதலால் மலச்சிக்கல் மட்டுமல்லாமல் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் குணமாக உதவுகிறது.

குங்குமப்பூ

        இந்தியாவில் காஷ்மிரில் பயிராகிறது.இக்குங்குமப்பூ செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் Saffron என்றழைப்பர். இக்குங்குமப்பூவின் நிறத்திற்கு முதற்காரணம் இதிலிருக்கும் குரோசின் எனும் வேதியல் பொருள் தான் காரணம்.

பயன்கள்:

       உணவு பொருளுக்கு நிறமுண்டாக்குவதற்கும்  மனமுண்டாக்குவதற்கும் சேர்ப்பதுண்டு.

       குங்குமப்பூ சூலகத்திலுள்ள அழுக்குகளைப் போக்கும்.

 விந்து குறைவுத்தன்மையைப் போக்குவதில் குங்குமப்பூவிற்கு பங்குண்டு.

       பிள்ளைத்தாய்ச்சிகள் இதை வெற்றிலையோடு கலந்து தின்றாலும் அல்லது பாலில் இட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் பிள்ளை அழகாக பிரசவ வலி மிகவில்லாமல் பிறக்குமென்பர்.

       பிரசவம் எளிதாகவிடின் ஒரு கழஞ்சு குங்குமப்பூவை சோம்பு குடிநீரில் கரைத்து குடிக்க சிசு உடனே வெளிப்படும்.

 பிரசவத்தினால் உண்டான குருதிக்கெடுதிக்கு குங்குமப்பூ ஒரு கிராம் மூன்று வேளை கொடுக்க குருதிக்கெடுதி நீங்கி கருப்பைக்கு ஆற்றல் தரும்.

       குங்குமப்பூவை தேனில் உரைத்து பெண்குறி, எருவாய், காது இவைகளிலுண்டாகிற நோய்களுக்கு பூச சீக்கிரத்தில் அவை மாறும்.

       குங்குமப்பூவை தாய்ப்பாலில் உரைத்து கண்ணில் தீட்டி வர கண்ணீரொழுக்கும், கண்ணைப் பற்றிய மற்ற நோய்களும் போகும்.

        குங்குமப்பூ சருமத்தில் காணும் நோய்களை நீக்கி சருமத்திற்கு பளபளப்பை தரும்.

        குங்குமப்பூ நரம்பு மண்டலத்தின் சோர்வை நீக்கும்.

 ஆயுர்வேதத்தில் Anti depressant medicine இல் குங்குமப்பூ மிகச்சிறப்பை ஆற்றுகிறது.

        குங்குமப்பூவில் இருக்கும் Crocin, Safranol எனும் வேதியியல் பொருள்கள் Serotonin, Dopamine, Norephinephrine என்று கூறப்படும்.

        மன அழுத்தம் மற்றும் உளவியல் சார்ந்த நோய்களை சீர் செய்கிறது.

         குங்குமப்பூவில் Potassium நிறைந்திருப்பதால் இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை சரி செய்ய தினமும் மிதமான நீரில் கலந்து பருகலாம்.

இரசச்செந்தூரம்

          இஃது இரசமும் கெந்தகமும் சேர்ந்து செயற்கையில் செய்யப்பட்டுக் கடைகளில் கிடைக்கும் இரச செந்தூரம். பார்பதற்கு பானை ஓட்டுச் சிறு துண்டுகள் போலச் சிவந்த நிறத்தில் கடைகளில் கிடைக்கின்றது.

பயன்கள்:

       இரசச் செந்தூரத்தை துளசிச் சாறு கொண்டு கொடுக்க விரைவாதம் நீங்கும்.

       அருக்கிலைச் சாறு கொண்டு கொடுக்க பித்த காங்கைப்பிணி தீரும்.

        தாமரை இலைச் சாறு கொண்டு கொடுக்க பித்த உன்மத்தத்தைச் சேர்ந்த குன்மம் தரும்.

       சிவ கரந்தைச் சாறு கொண்டு கொடுக்க பித்த அரோசகம் தீரும்.

       வன்னியிலைச் சாறு கொண்டு கொடுக்க வயிற்றுவலி தீரும்.

        தண்ணீர், நெற்பொரி ரசம் கொண்டு கொடுக்க மயக்கத்தை உண்டாக்கும் வெப்பப்பிணி தீரும்.

வங்க பற்பம்

        வங்கம் பல தாவரங்களில் இச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

        முத்திருக்கச்செவி, வேலிப்பருத்தி, சிறுபீளை, வெள்ளறுகு, சீந்தில் போன்றவற்றில் இச்சத்து நிறைந்து இருக்கிறது.

        உலோகச் சத்துகள் சிறிய அளவில் தாவர பொருள்களில் உள்ளதால் நம் முன்னோர்கள் நோய் ஆரம்பகாலத்தில் தாவர பொருள்களை கொண்டு சிகிச்சை செய்து பிறகு உலோகத்தை நேராக உபயோகப்படுத்தினர்.

        வங்கம் சிறுநீரினை பெருக்கும் செய்கை உடையது.

‘வங்கம் கெட்டால் பங்கம்’ என்னும் ஒரு பழமொழி படி வங்கத்தை நன்முறையில் சுத்தி செய்து உபயோகிக்க வேண்டும்.

        வங்க பற்பத்தின் அளவு துவரையின் கால் அளவு.

வங்க பற்பம் பயன்கள்:

      அசீரணம், குன்மம், புளித்தேப்பம் போன்றவற்றிற்கு வெந்நீரில் கலந்து தரலாம்.

      வங்க பற்பத்தில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால் இரத்த சோகையை சரி செய்யும்.

      Genito-urinary disorder சரி செய்வதற்கு வங்க பற்பத்தை ஆயுர்வேதத்தில் கையாளுகின்றனர்.

      இரைப்பு நோய்க்கும் வங்க பற்பம் மருந்தாக பயன்படுகிறது.

       Testicular regeneration, Gastric ulcer போன்றவற்றிற்கு மருந்தாக தரலாம்.

      சித்த மருத்துவத்தில், வாதப் பிணிக்கு கள்ளிலும், பித்த பிணிக்கு குளிர்ந்த நீரிலும் கபப் பிணிக்கு கருப்பஞ் சாற்றிலும் அனுபானித்து கொடுக்கலாம்.

பவழம்

         வலனுடைய சதை கடலில் வீழ்ந்து நற்பவழமாயிற்று என்பதும், தேவேந்திரன் வஜ்ஜிராயுதத்தினால் மலையின் சிறகுகளை கொய்த பொழுது குருதி கடலில் வீழ்ந்து கொடிப் பவழமாயிற்று என்பதும் புராண வரலாறு.

        கடலில் வாழும் உயிரினங்களில் ஒரு வகை நுண்ணுயிரியின் புறக்கூடே பவழம் என்று அழைக்கப்படுகிறது.

குணம்:

     பவழம் கீழ்க்காணும் நோய்களை நீக்கும் தன்மையுடையது

 1. சுரத்திலுண்டாம் தோடம்
 2. கபம்
 3. சன்னிபாதசுரம்
 4. இருமல்
 5. அரோசகம்
 6. விட சந்துகளினால் உண்டாகும் விடம்
 7. தாது நட்டம்
 8. தாகம்
 9. நாவிலுண்டாம் சுரசுரப்பு.
 10. சரீரத்திற்குக் காந்தி உண்டாகும்.

செய்கை:

       நரம்பு தளர்ச்சியை நீக்கும் தன்மையுடையது. சிறுநீரைப் பெருக்கும். மலமிளக்கி, துவர்ப்பி செய்கையுடையது.

பயன்கள்:

      இது இரத்தம் தொடர்பான நோய்களை குணப்படுத்தும்.

      இது எலும்பு மஜ்ஜை, மன நோய்கள் போன்ற பல கடுமையான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

      இது எலும்பின் வலிமையை மேம்படுத்துகிறது.

       மேலும் இது புற்று நோய், மார்பக புற்று நோய், மூளைக் கட்டி போன்ற கடுமையான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

சுகாதார நன்மைகள்:

      எலும்புகளைப் பலப்படுத்துகிறது. பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்பு இழப்பு மற்றும் ஆஸ்டியோ போரோசிஸைத் தடுக்கிறது. தசை சுருக்கங்களுக்கு உதவுகிறது.        இதய நோயைத் தடுக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இரைப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கிறது. மல்டிபிள் ஸ்களீரோசிஸுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

நெய்:

       நெய்யை உருக்கி உண்பது உடலுக்கு நல்லது. நெய் பாசிடிவ் உணர்வு, உடல் வளர்ச்சி மற்றும் வேலைகளில் கவனம் ஆகியவற்றை கவனிக்க உதவும்.

      நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலம் எளிதில் உறிஞ்சப்பட்டு ஆற்றலாக மாறுகிறது.

      விளையாட்டு வீரர்கள் நெய்யை ஆற்றலுக்கான தூண்டுகோளாக உணவுடன் சேர்த்துக் கொள்கின்றனர்.

பயன்கள்:

      நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலம், உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளைக் கரைத்துக் கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

      இது நச்சு உயிர்களை அழித்து, உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்று நோய் பிரச்சினை வராமல் தடுக்க உதவுகிறது.

     நெய்யில் பியூட்ரிக் ஆசிட் இருக்கிறது. இது இரைப்பை அமிலத்துடன் சேர்ந்து உற்பத்தியாகி, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

      முகத்தில் ஏற்படும் கருவளையம், உதட்டு கருமை, வறண்ட சருமம் மற்றும் தலை முடிப் பிரச்சினை ஆகியவற்றிற்கும், சிறந்த அழகு பராமரிப்பு பொருளாகவும் பயன்படுகிறது.

    நெய்யில் அதிகப்படியான வைட்டமின் ஏ மற்றும் ஈ இருக்கின்றன. ஆதலால் கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

    செரிமானப் பிரச்சினைகளை குணமாக்குகிறது.

    நெய் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், இதய நோய் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

    நெய்யை ஒரு நாளைக்கு 15 கிராம் அளவு உணவில் சேர்த்து உண்ணலாம்.

நாட்டுச் சர்க்கரை:

       சர்க்கரையில் சிறந்தது நாட்டுச் சர்க்கரை.

பயன்கள்:

      நாட்டுச் சர்க்கரையில் இரும்புச் சத்து, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

இரத்தத்தில் தட்டணுக்கள் குறைவை சரி செய்ய நாட்டுச் சர்க்கரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து உண்ண நற்பலன் தரும்.

      நாட்டுச் சர்க்கரை இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

      நாட்டுச் சர்க்கரை மூட்டு வலியை சரி செய்கிறது.

      இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றை சரி செய்கிறது.

      நாட்டுச் சர்க்கரை உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

     இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

புற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

     நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டுகிறது.

     நாட்டுச் சர்க்கரையில் வைட்டமின் பி நிறைந்திருப்பதால் சரும பளபளப்பை தந்து செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்கும்.

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.