எழுத்தாளர் – விரல் பிடிப்பு வலி

எழுத்தாளர் – விரல் பிடிப்பு வலி

எழுத்தாளர் – விரல் பிடிப்பு வலி

மரு. S. வெங்கடாசலம்


(WRITER’S CRAMP)

பேனா பிடித்து எழுதும் போது விரல்களில் வலியும் ஒருவித விறைப்புத் தன்மையும் ஏற்பட்டு எழுத முடியாத நிலை ஏற்படும்; வலி வந்து விட்டால் ரொம்ப நேரம் நீடிக்கும். இது தான் ‘writer’s cramp’.

உடலின் வேறு எந்த உறுப்புகளுக்கும் வேலை கொடுக்காமல் கைக்கு மட்டுமே வேலை கொடுக்கும் எழுத்தாளர்கள், எழுத்தர்கள், கணக்காளர்கள் கைகளில் வலியும் இழுப்பும், பிடிப்பும் ஏற்பட்டு வேதனைப்பட நேரிடுகிறது. ரத்த ஓட்டம் இந்த பகுதிகளில் குறையும் போது வலி உண்டாகிறது. ரத்தக்குழாய்கள் சிறுத்துப் போவதால் தான் இந்நிலை ஏற்படுகிறது.

கை கால்களுக்கும், தசைகளுக்கும் உடற்பயிற்சி கொடுக்காவிட்டால் ரத்தக்குழாய்கள் சிறுத்து விடும். இதனால் ரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லாத பகுதிகளில்.. தசைகளுக்கு அதிக வேலை கொடுத்தால் வலியும், மதமதப்பும், பிடிப்பும் ஏற்பட்டு விடுகிறது. தொடர்ந்து எழுத முடியாமல் போகிறது. கால்சியம் குறைபாடு காரணமாகவும் இது போன்ற வலிகள் வருவதுண்டு. கால்சியம் உள்ள கேரட் ,பீட்ரூட் ,பால், கீரை வகைகள், உருளைக்கிழங்கு.. உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி அவசியம். கைவீசி நடக்கும் நடைப்பயிற்சியிலாவது தினமும் ஈடுபட வேண்டும். இப்படி பயிற்சிகளையும் உரிய உணவுகளையும் எடுத்துக்கொள்ளாமல், உரிய மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் இருந்தால் அதன் பின்விளைவாக கடுமையான மூட்டு முடக்குவாத நோய்களிலே மாட்டிக் கொள்ள நேரிடும்.

Writer’s Cramp உபாதைக்கு ஹோமியோபதி யிலும், திசு மருத்துவத்திலும்..
Magnesium Phos என்ற மருந்து பயன்படும். இது தவிர Gelsemium, Ruta, Zincum phos, Cuprum met, Ferrum iod போன்ற சில முக்கிய மருந்துகளும் பிடிப்பு வலிகளுக்கு விடுதலை கொடுக்க உதவும்.
ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மருந்துகளை கையாள்வது முக்கியம்.

மருத்துவ ஆலோசனைக்கு

மரு. சதீஷ் குமார், BHMS.,

70102 88823

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.