மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி

மரு. V. காயத்ரி, MD(s)

மாதவிடாய் வலி ( Menstrual Colic / Pain)

Self-Care Homeopathy: ঋতু-শূল (Menstrual Colic)

பொதுவாக மாதவிடாய் ஏற்படும் பொழுது வயிற்றுவலி ஏற்படும். சிலருக்கு இது சற்று அதிகமாக இருக்கும். கிட்டதட்ட பத்தில் எட்டு பெண்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் “DYSMENORRHEA” என்பர்.

மாதவிடாய் வலி இரு வகைபடும்

முதல் வகை:

இது பொதுவாக 14 வயது முதல் 25 வயது வரை காணப்படும். இதில் வயிற்றிலோ அல்லது கருப்பையிலோ எந்த வகையான நோயும் இருக்காது. இந்த வலியின் காரணம் வலியினை சகித்து கொள்ளும் தன்மையினைப் பொருத்தோ அல்லது மண் அழுத்தம் காரணமாக இருக்கும்.

இரண்டாம் வகை:

இந்த வகையில் கருப்பையிலோ அல்லது வயிற்றிலோ நோய் ஏற்பட்டிருக்கும். இதற்கு தகுந்த சிகிச்சை தேவை.

அறிகுறிகள்:

*** மாதவிடாய் சூழற்சிக்கு சில மணி நேரம் முன் ஆரம்பமாகி படிப்படியாக குறையும்.

*** 14 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த வகையான வலி ஏற்படும்.

*** அடிவயிற்றிலோ, தொப்புளுக்கு கீழோ வலி காணப்படும். இந்த வலி காலுக்கும், முதுகுக்கும் பரவலாம்.

*** உடல் சோர்வு.

*** களைப்பு

*** முதுகு வலி

*** தலைவலி

*** சிலருக்கு குமட்டலும், வாந்தியும் ஏற்படும்.

*** சிலருக்கு சத்தமும், அதிக வெளிச்சமோ இருந்தால், எரிச்சலும், கோபமும் வரும்.

*** சிலருக்கு இரத்தபோக்கு அதிகமாக இருக்கும். இந்நிலையை “MENORRHAGIA” என்று ஆங்கிலத்தில் கூறுவர்.

வீட்டு வைத்தியம்:

*** கசினிக் கீரையின் சாறு 30 மில்லி காலையும் மாலையும் குடிக்கவும்.

*** வலி அதிகமாக இருந்தால், கிருணி விதை 10 கி கற்கண்டு 10 கி ஒன்றாக சேர்த்து அரைத்து உண்ணவும்.

*** 10 கி வெந்தயத்தை 10 மில்லி தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.

*** கொத்தமல்லி சாறில் கருஞ் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, பொடியாக்கி, தினமும், ஒரு கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் வலி குறையும்.

*** உலர்ந்த புதினா இலையுடன் ஒரு தேக்கரண்டி எள் சேர்த்து கஷயமாக செய்து சாப்பிட்டால் வலி குறையும்.

*** ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட வலி குறையும்.

*** கசகசா 50 கி எடுத்து அதை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை தூய துணியில் நனைத்து அடிவயிற்றில் ஒத்தடம் போல கொடுத்தால் வலி குறையும்.

*** ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை குங்கும பூவும், சேர்த்து, மாதவிடாய் நேரத்தில், காலையும் மாலையும் சாப்பிட்டால், இரத்தபோக்கு சீராக இருக்கும். (அதிக இரத்த போக்கு இருப்பவர்கள் இதை தவிர்க்கவும்.)

*** முருங்கை கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்து கஷாயம் ஆக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் வலி குறையும்.

மாதவிடாயின் போது உண்ண வேண்டிய உணவு வகைகள்:

முழு தானியங்கள், கோதுமை, தானிய ரொட்டி, ஓட்ஸ், கீரை வகைகள், குறிப்பாக புளிச்ச கீரை – இதில் இரும்பு சத்து மிக அதிகம் உள்ளது, மற்றும் பசலை கீரை, கேரட், பீன்ஸ், பட்டாணி, நெய் இவைகளுடன், அனைத்து வகை பழங்கள் குறிப்பாக வாழைப்பழம், அண்ணாச்சி பழம், பப்பாளி பழம்.

மாதவிடாயின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்:

மீன், கோழி, முட்டை மற்றும் பால் பொருட்கள், எண்ணெயில் வறுத்த பொருட்கள், கொழுப்பு உணவுகள் இவைகளை அந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

ஒருங்கிணைந்த மாற்று மருத்துவ முறை:

மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s), மரு. பால் ஜோதி, BSMS,

உங்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: 70102 88823

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.