பொன்னங்கண்ணித் தைலம்: எளியமுறை

பொன்னங்கண்ணித் தைலம்: எளியமுறை

பொன்னாங்கண்ணிச்சாறு – 500 மி.லி

நல்லெண்ணெய் – 500 மி.லி

விளாமிச்சை வேர் – 10 கிராம்

சம்பங்கி விதை – 10 கிராம்

செம்பக மொக்கு – 10 கிராம்

அகில் – 10 கிராம்

சந்தனத் தூள் – 10 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்

கோரைக் கிழங்கு – 10 கிராம்

நிலவேம்பு – 10 கிராம்

நெல்லிக்காய் வற்றல் – 10 கிராம்

நல்லெண்ணெயை ஒரு பானையில் ஊற்றிப் பொன்னாங்கண்ணிக் கீரைச் சாற்றையும் ஊற்றிச் சிறிது சூடேற்றிக் கொள்ளவும்.

விளாமிச்சை வேர், சம்பங்கி விதை, செம்பக மொக்கு, அகில், சந்தனத் தூள், கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு, நிலவேம்பு, நெல்லிக்காய் வற்றல் ஆகிய எல்லாச் சரக்குகளையும் இடித்து தைலப் பானையில் போட்டுப் பிற சிறு தீயாக எரிக்கவும்.

தைலப் பதத்தில் கவனமாக இறக்கவும். ஆறியதும் கண்ணாடிப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.

7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து முழுகி வர கண்ணோய்கள் நீங்கும். தலை முடி நன்றாக வளரும். முடி உதிராது. உடம்பு குளிர்ச்சியாகும்.

AADHAVAN’S COOL HAIR OIL

நெல்லிக்காய், சீகற்காய், வல்லாரை, கடுக்காய், அவுரி, கரிசலாங்கன்னி, கீழாநெல்லி, ரோஜாப்பூ, அதிமதுரம், கோரைக்கிழங்கு, மருக்கொழுந்து, மருதாணி போன்றவை கலந்தது.

EMBLICAN OFFICINALIS, TERMINALIA CHEBULA RATZ, TERMINALIA BELERICA, ACACIA CONCINNA, CYPERUS LONGUS, GLYCYPRIHZAGLABRA, ECILIPTA ALBA

குணப்படுத்தும் நோய்கள்:

தலைமுடி உதிர்தல், தலைமுடி உடைதல், இளநரை, பொடுகு, மன அழுத்தம், படப்படப்பு, தலை வலி, தூக்கமின்மை, உடல் உஷ்ணம்.

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.