சுக்கில் இருக்கும் சூட்சுமம்

சுக்கில் இருக்கும் சூட்சுமம்

சுக்கில் இருக்கும் சூட்சுமம்

மரு. அருண் சின்னையா PhD.,

முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.

சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:

அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக்கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.

சுக்கு மொழிகள் பத்து:

  1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.
  2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.
  3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.
  4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.
  5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?
  6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.
  7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.
  8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.
  9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.
  10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.

பொதுப்பயன்கள்:

பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

AADHAVAN GINGER CAPSULE

AADHAVAN GINGER CAPSULE

PRODUCT DESCRIPTION:

இஞ்சி கலந்துள்ளது.

குணப்படுத்தும் நோய்கள்:

இரைப்பைக் குடல் வலி, ஜீரண கோளாறுகள், வாய்வு கோளாறுகள், வீக்கங்கள் போன்றவற்றை குணமாக்கும். சளி, இருமல் ஆகியவற்றை குணமாக்கும்.

மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s),

70102 88823

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.