சிறுநீர் கடுப்பு நீங்க சிறுகீரை சூப்
மரு. அருண் சின்னையா
தேவையான பொருட்கள்:
சிறுகீரை – 2 கட்டு
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
தக்காளி – 4 எண்ணிக்கை
பெருங்காயம் – புளியங்கொட்டை அளவு
மஞ்சள்தூள் – 5 சிட்டிகை
துவரம்பருப்பு – 50 கிராம்
பச்சைமிளகாய் – 2 எண்ணிக்கை
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் கீரையில் வேர்நீக்கி அலப்பி தண்டுகளோடு சேர்த்து நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து, தேவைக்குத் தண்ணீர் சேர்த்து, வேகவைத்து கடைந்து, பருப்புத் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாய் பொடித்துக் கொள்ளவும். தக்காளி, மிளகாயை அரிந்து வைக்கவும்.
இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, கீரைத் தண்டுகளைப் போட்டு மிளகு, சீரகம் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும். ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள பருப்புத் தண்ணீரையும் இத்துடன் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வரும்படி செய்யவும்.
இத்துடன் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிட மிக்க சுவையாய் இருக்கும்.
பயன்கள்:
உடம்பில் அதிக அளவு காணப்படும் உப்பைக் குறைக்கும். சிறுநீர் கற்கள் கரையும்.
AADHAVAN UTIQ CAPSULES
AADHAVAN UTIQ CAPSULES

PRODUCT DESCRIPTION:
நெருஞ்சில், சிறுபிளை, மூக்கிரட்டை, புதினா, மாவிலங்கம், கிஞ்சுகம், தொட்டாற் சுருங்கி, மஞ்சள், சீந்தில், சிலாசித்து மேலும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
குணப்படுத்தும் நோய்கள்:
சிறுநீரக பாதை தொற்றுநோய், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் கோளாறு போன்ற அனைத்து நோய்களையும் குணமாக்கும்.