குன்மம் (Dyspepsia)

குன்மம் (Dyspepsia)

குன்மம்

மரு. காயத்ரி, MD(s)

இயல்பு: (Disease Character)

குன்மம் நோயில் உண்ணும் உணவு செறியாது. உண்ட சிறிது நேரத்திற்கெல்லாம், வயிற்றுள் தாங்கமுடியாத எரிச்சலையும், வலியையும் உண்டாக்கி, உண்ட உணவை வாந்தியெழ செய்து, உட்சென்ற உணவை பயனாற்றதாக்கும்.  அதனால், உடலின் ஊட்டமும், வன்மையும், நாளுக்குநாள் உடல் மெலிவடைந்து, உடல் குன்றும்; குன்றிய உடலினால், மனமும்குன்றும், ஒரே நேரத்தில் உடலையும் மனதையும் குன்ற செய்து, உயிரையும் மாய்க்க செய்யும் நோய், ஆதலால் இதனை குன்மம் என பெயரிட்டனர்.

நோய் தோன்றும் வழி: (Causes)

மிகுதியும் சூடுள்ள உணவுகளாலும், காற்றை வயிற்றுக்குள் நிரப்பக்கூடியா உணவுகளாலும், மண், உமி, கல், தூசு இவை கலந்த உணவுகளாலும், சுனைநீர். ஓட்டமற்ற நீர், சுண்ணாம்பு கலந்த நீரினாலும், தேங்காய் பால் போன்ற எளிதில் செரிக்க முடியாத உணவுகளாலும், அடிக்கடி சினம் கொள்வதினாலும், பட்டினி இருப்பதினாலும், மன சளிப்பினாலும், இந்நோய் உண்டாகிறது.

நோயின் முற்கூறிகள்:  (Primary Symptoms)

இன்நோயின் முற்கூறியாக பசியின்மை, பசி இருந்தாலும் உணவின்மீது நாட்டமின்மை, குமட்டல், அடிக்கடி ஏப்பம் உண்டாக்குதல், வாயில் நீருறுதல், உணவு எதுக்களித்தல், வயிறை புரட்டி வலி எடுத்தல், வாந்தி எடுத்தல், புளித்த ஏப்பம், வயிறு இரைத்தல், ஜீரணிக்காத வயிற்றுப் போக்கு ஆகியவைகளை தோற்றுவிக்கும்.

நோயின் வகைகள்: (Types)   

சித்த மருத்துவத்தில், யூகி முனிவர் கூற்றுபடி குன்மம் 8 வகையாக பிரிக்கப்படுகிறது.

  1. வளி குன்மம்.
  2. அழல் குன்மம்
  3. ஐய குன்மம்
  4. முக்குற்ற (சன்னிக்) குன்மம்
  5. கால் (வாயு) குன்மம்
  6. ஏரி குன்மம்
  7. வாந்தி குன்மம்
  8. வலி குன்மம்

பொதுக் குறிகள்: (General Symptoms)

இந்நோய் பெரும்பாலும் 25 – 45 வயதுடையவர்களுக்கு காணப்படுகிறது.  உடல் வன்மை மிகுந்து ஏவ்வுணவையும் செரிப்பிக்குந்தன்மை உள்ள போது, திடீரென பசியின்மை, வாய் குமட்டல், பித்த வாந்தியாக்குதல், உண்ட உணவு செறியாமல் ஏப்பமிடல், புளித்த ஏப்பம் போன்ற குறிகள் உண்டாகி, நாட்கள் செல்ல செல்ல நோயை வலுக்க செய்யும்.  பின்னர், வயிறு புரண்டு வலித்தல், போக போக தாங்க முடியாத வலியினை ஏற்படுத்தும். வலியினை தாங்க முடியாமல், விரலால் தொண்டையினை குத்தி வாந்தி எடுப்பதினால், வலி சிறிது குறையும்.

குற்ற வேறுபாடு:

      “வாதபந்த மலாது குன்மம் வாராக”       – தேரன்.

இவ்வாறு கூறியிருப்பதால், உணவின் வேறுபட்டாலும், மற்ற செயல்களாலும் வளிகுற்றம் கேடு அடைந்து, அது தனக்கு துணையாக மற்ற குற்றங்களையும் கூட்டி, அவற்றின் தொழில்களையும் கெடுத்து, இந்நோயினை உண்டாக்குகிறது.  கிழ்நோக்குக்கால் (அபான வாயு) கெடுவதால், எருவை (மலத்தை) கட்டுபடுத்தியும், வயிற்றுள் காற்றை பெருக்கியும், மேல்நோக்குக்கால் (ஏப்பம் – உதனா வாயு) கெடுவதால், வாந்தியை பிறப்பிக்கும்.

உணவு : Diet

குன்மநோய் என்பது அகட்டை (இரைப்பை) பற்றி வரும் நோயாதலால், உட்கொள்ளும், உணவு எளிதில் செரிக்க கூடிய உணவாகவே இருக்க வேண்டும்.

** ஒருமுறை வடித்த சாதமும் அதனுடன், இளம் காய்கறிகளுடன் உணவு உட்கொள்ள வேண்டும்.

** இளம் கத்தரி, முருங்கை, வெண்டைக்காய், பீர்க்கு, புடலங்காய், இவைகளை உணவில் அதிகளவு சேர்க்கவேண்டும்.

** தேங்காய், கொள்ளு, உளுந்து மற்றும் மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். இவைகள் எளிதில் ஜீரணம் ஆகாது.

** ஜீரணம் சரியாகும் வரை கஞ்சி போன்ற உணவுகள் எடுக்க வேண்டும்.

** ஜீரணத்தை தூண்ட கூடிய இஞ்சி, பிரண்டை போன்ற துவையல்கள் உணவுடன் சேர்த்து கொள்ளவும்.

** காபி போன்ற பானங்களையும், பாட்டிலில் அடைத்த குளிர் பானங்களை தவிர்க்கவும், ** புகை பிடித்தல், போதை பொருட்கள், மது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

தொடர்புக்கு: +91 70102 66823

AADHAVAN GAS – Q TABLET

GAS – Q TABLET

PRODUCT DESCRIPTION:
இஞ்சி, சீரகம், மாதுளை, இலவங்கப்பட்டை, சீந்தில் கொடி, தாளிசபத்திரி, நெல்லி, குமட்டிக்காய், ஓமம், கடுக்காய், பப்பாளி ஆகியவை கலந்துள்ளது.

குணப்படுத்தும் நோய்கள்:
அஜீரணக்கோளாறுகளை நீக்கும். பசியற்ற நிலையை சரிசெய்யும். வயிற்று உப்பசம் மற்றும் வாயுத்தொல்லை நீக்கும்.

DOSAGE:
1 To 2 Tab. 2 To 3 Times A Day With Water After Meal.

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.