கேரட் கஞ்சி
பரம்பரை பாரம்பரிய வைத்தியர்: பழனி செல்வராஜ், பழனி.
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி குருணை 150 கிராம் (1 கப்)
துருவிய கேரட் 1 கப்
சின்ன வெங்காயம் 1/4 கப்
மிளகு 1 டீ ஸ்பூன்
எள் 2 டீ ஸ்பூன்
நல்லஎண்ணைய் 2 டீ ஸ்பூன்
முட்டை வெள்ளைக் கரு 1 (தேவைப்பட்டால்)
உப்பு தேவையான அளவு
செய்முறை:
குருணையை 1 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, காய்ந்த பின் வெங்காயம், கேரட் போட்டு வதக்கி, உப்பு, மிளகு தூள் சேர்த்து, போதிய அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன், வடிகட்டிய அரிசியை போட்டு, வெந்த உடன், எள் (விரும்பினால் முட்டை வெள்ளைக்கரு சேர்த்து,) மிதமான சூட்டில் குடிக்கவும்.
பயன்பாடு:
இடுப்பு வலி, உடல் சூடு, கண் எரிசசல் முதலியவை குணமாகும், உடலுக்கு ஊக்கத்தையும், மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தரும்.
மருத்துவ ஆலோசனைக்கு மரு. பால் ஜோதி, BSMS.,
70102 88823
நன்றிகள்பலபலதொடர்ந்து இதுபோன்றமருத்துவகுறிப்புகளை
எதிர்பார்கின்றோம்
நன்றி