கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு

மரு. V. காயத்ரி, MD(s)

நாம் உணவாக பயன்படுத்தும் கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கும் ஒன்றாகும். கிழங்கு வகைகளில் அதிக மருத்துவ குணம் கொண்டது கருணைக் கிழங்கு.

பொதுவாக சித்தர்கள் “கிழங்குகளை உண்ணக் கூடாது” என்பர்.

“மூலம் சேர் கறி நுகரோம்” என்பர். மூலம் என்றால் கிழங்கு என்று பொருள்படும். இருப்பினும், கிழங்குகளிலேயே கருணைக் கிழங்கை மட்டும் சாப்பிடலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

அதனையே “மண் பரவு கிழங்குகளிற் கருணையின்றி புசியோம்” என்ற பாடல் வரிகளில் நாம் அறியலாம்.

கருணைக் கிழங்கை நாம் அடிக்கடி சாப்பிடுவதால், மூலம், மலசிக்கல் போன்ற சில நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கலாம்.

கருணைக் கிழங்கில் இருவகை உண்டு.

  1. காறும் கருணை. 2. காறாக் கருணை.

இந்த காறும் கருணை பிடி கருணை என்றும் கூறுவர். இந்த காறும் கருணை உண்ணும் போது நாக்கில்படுகின்ற போது ஒருவகை நமைச்சலை உண்டாக்குவதால் இப்பெயர் பெற்றது. இதற்கு முறிவாக சமைக்கின்ற பொழுது இக்கிழங்கை வேகவைத்து, அதன்பின், அதன் தோலை நீக்கி, அத்துடன் புளியை சேர்த்து சமைக்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் காற தன்மை நீங்கும். நாக்கிலும், தொண்டையிலும் அரிப்பு வராது. மேலும், இதை அரிசி கழுவி வடித்த நீரில் வேக வைத்தாலும், இந்த காறல் நீங்கும்.

இந்த கருணை செரிமான மண்டல உறுப்புகளில் சிறப்பாக வேலை செய்யக்கூடியது. செரிமான சக்தியை அதிகப்படுத்தி, மேலும், அவ் உறுப்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும். உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களுக்கு நன்மை கொடுக்கிறது. ஆகவே தான் இது மூலசூடு, மூல எரிச்சல், மூலம், இவற்றை நீக்குகின்ற தன்மை படைத்ததாக இருக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய்கும் இது நன்மைபயக்கிறது.

சித்த மருத்துவத்திலும், மூல நோய்க்கு கருணைக் கிழங்கு லேகியம் மிகவும் பயன்படுக்கிறது. இந்த லேகியம் உண்பதால், எல்லாவிதமான மூல நோய்களும் குணமாகிறது.

இது தவிர கருணைக் கிழங்கு கொண்டு குழம்பு, பொரியல், மசியல், கூட்டு, வறுவல் போன்ற பலவகையான உணவுகள் தயாரித்து உண்ணலாம்.

கருணைக் கிழங்கில் அடங்கியுள்ள சத்துக்கள் (100 கிராம்):

1. புரதம் – 2.2 கிராம்

2. கொழுப்பு – 0.4 கிராம்

3. மாவு பொருள் – 18 கிராம்

4. கால்சியம் – 35 மி. கிராம்

5. பாஸ்பரஸ் – 22 மி. கிராம்

6. இரும்பு – 0.7 மி. கிராம்

AADHAVAN PAILESNIL TABLET

அனைத்து விதமான மூல வியாதிகள் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வியாதிகளுக்கும் அறுவை சிகிச்சை இல்லாத ஒருங்கிணைந்த மாற்று மருத்துவ ஆலோசனைகளுக்கு

மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s), மரு. பால் ஜோதி, BSMS,

உங்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: 70102 88823

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.